ரூட்ஸ் குழுமங்களின் சார்பில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோவையில் செயல்பட்டு வரும் ரூட்ஸ் குழும நிறுவனங்களில் "46-வது தேசிய பாதுகாப்பு தின விழா" இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது அனைத்து நிறுவனங்களிலும், பணியாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரத்தை மேம்படுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக ரூட்ஸ் கம்பெனி வளாகத்தினுள் பாதுகாப்பு வாசகங்களின் பேனர்கள் அனைத்து பணியாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பணியாளர்கள் தங்களது பணிகளை துவங்குவதற்கு முன்பு ஒன்றுகூடி பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு தினம் குறித்த சிறப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது.



இதன் துவக்க விழாவில் ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் பங்கேற்று பாதுகாப்பு குறித்த கருத்துரை வழங்கினார்.



தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை கூடுதல் இயக்குநர் கே.அருள், விழாவினைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

விழாவில், சரகம் ஒன்று மற்றும் இரண்டின் தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இணை இயக்குநர்கள் பி.என்.சங்கர் மற்றும் எம்.வி.செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, ரூட்ஸ் காஸ்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம் விழாவில் பங்கேற்று பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் சபீனா மற்றும் வந்தே மாதரம் ஏ.மாதவன் ஆகியோர் பங்கேற்று "தொழில்சாலையில் பாதுகாப்பு" என்ற தலைப்பில் பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சியினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "தொழிற்சாலையில் பாதுகாப்பிற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது" என்ற தலைப்பில் பணியிடச் சூழலே, பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற இருவேறு கருத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.



இதில், பணியிடச் சூழலே என்ற கருத்தை முன்வைத்து ஆர்.ராஜ்குமார், ஆர்.சுகுமார், எம்.பாரதிராஜா ஆகியோரும், பாதுகாப்பான செயல்பாடுகளே என்ற கருத்தை முன்வைத்து எஸ்.டி.செந்தில்குமார், என்.செந்தில்ராஜா, ஆர்.சதீஸ் ஆகியோரும் பேசினர். இப்பட்டிமன்றத்தில் எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட்., மற்றும் கோவை உபமண்டலம், தேசிய பாதுகாப்பு குழுமம் உறுப்பினர் துணை மேலாளர் (பாதுகாப்பு) சி.ராஜேஷ்வரன் நடுவராக செயல்பட்டார்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...